பெங்களூர்- கோவை தனியார் பேருந்தில் 1.5 கிலோ நகை கொள்ளை
கோவை: பெங்களூரில் இருந்து கோவை வந்த பேருந்தில் சுமார் 1.5 கிலோ தங்கம் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகின்றார். கோவை நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகை விநியோகம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எப்போதும் போல் கோவை வந்து ஆர்டர் எடுத்த ராஜேஷ், பெங்களூரில் உள்ள தன்னுடைய உதவியாளர் பப்புவை 3.5 கிலோ நகைகளை கோவைக்கு எடுத்துவர கூறியுள்ளார்.
அதன்படி பப்புவும் நகைகளை எடுத்துக் கொண்டு நேற்று இரவு 11.30 மணிக்கு கோவை புறப்படும் பெங்களூரு தனியார் பஸ் ஒன்றில் பயணித்து, இன்று காலை கோவை வந்தடைந்துள்ளார். உடனே ஆர்.எஸ்.புரத்தில் தங்கியுள்ள ராஜேஷை பார்க்கச் சென்றுள்ளார்.
அங்கு சென்று நகைப்பையை பிரித்து பார்த்த போது, 1 கிலோ 600 கிராம் மதிப்புடைய நகைகள் காணாமல் போய் இருந்தது. இதனையடுத்து இருவரும் அத்தனியார் பஸ்ஸில் தேடினர்.
அதனால் எந்த பலனும் கிடைக்காததால் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பஸ்சில் நகையை யாராவது திருடிச்சென்றார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூபாய் 44 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொள்ளைச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications