சேலம் டி.எஸ்.பி வீட்டிலேயே கை வைத்த திருடர்கள்- 100 சவரன் நகை “அபேஸ்”!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் டி.எஸ்.பி வீட்டிலேயே புகுந்து 100 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் சீலநாயகன்பட்டியைச் சேர்ந்தவர் ஹயாத். இவர் தர்மபுரி மாவட்ட க்யூ பிராஞ்ச் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மார்ச் 19 ஆம் தேதியன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நாகூர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

Gold theft in Salem DSP home

திருவிழா முடிந்து இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை கொள்கை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி வீட்டிலேயே கொள்ளைபோன சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+