For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தரமான கல்வி.. சாதியத்துக்கு நோ.. கமலின் கட்சி கொள்கை இதுதான்!

தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் கொள்கை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தரமான கல்வியும் சாதி ஒழிப்பும் தான் கமல் கட்சியின் கொள்கை

    மதுரை: தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் கொள்கை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் 40 அடி உயர கம்பத்தில் ஏற்றி தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரையும் கமல் அறிவித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    மக்கள் நலனே கொள்கை

    மக்கள் நலனே கொள்கை

    இதைத்தொடர்ந்து கட்சி அறிமுக மாநாட்டில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஆளும் கட்சிகளை சரமாரியாக விளாசினார். மக்கள் நலனே கட்சியின் கொள்கை என்று அவர் கூறினார்.

    சாதி மதத்துக்கு நோ

    சாதி மதத்துக்கு நோ

    எல்லா முதல்வர்களுக்கும் உள்ள கொள்கை தான் மக்கள் நீதி மய்யத்துக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார். தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும், சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

    தடையில்லா மின்சாரம்

    தடையில்லா மின்சாரம்

    அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றும் கமல் கூறினார். சாதி மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    ரத்தத்தைக்கூட..

    ரத்தத்தைக்கூட..

    பேராசையே பற்றாக்குறைக்கு காரணம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலத்தில் இருந்து தண்ணீர் என்ன ரத்தத்தைக்கூட பெற்று தர முடியும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நலனே கொள்கை கோட்பாடு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    English summary
    Good education and electricity power for all is the Kamal party's policy . Kamal has said this his party launch speech. Public goodness is the party policy .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X