வாடகை தாரர்களுக்கு குட்நியூஸ்? இந்த மாவட்டங்களில் வசிப்பவரா நீங்கள்? இனி கோர்ட் கேஸ் அலைச்சல் வராது
மயிலாடுதுறை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப, வாடகை வீட்டுவசதி ஆணையங்களை சீரமைத்து புதிய அலுவலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதன் மூலம் வாடகை ஒப்பந்தப் பதிவுகளில் நிலவும் குழப்பங்கள் நீங்கி, பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சட்டப்பூர்வ சேவைகளைப் பெற வழிவகை ஏற்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.. அரசின் திட்டம் என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
வாடகை வீட்டு வசதி ஆணையம் என்பது, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையிலான உறவை முறைப்படுத்தவும், வாடகை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்வதன் மூலம் வெளிப்படையான சூழலை உருவாக்கி, இருதரப்பு உரிமைகளையும் பாதுகாப்பதாகும்.
வாடகை வீட்டு வசதி ஆணையம்
இந்த ஆணையம் வாடகையை நிர்ணயம் செய்தல், வீட்டை காலி செய்வதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கையாளுதல் மற்றும் முறையற்ற வெளியேற்றங்களை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் நீதிமன்றங்களுக்கு போகாமலேயே வாடகைத தகராறுகளுக்கு எளிதான தீர்வை பெற முடியும்.. சீக்கிரமாகவும் தீர்வு காண முடியும்..
இது ஒரு நடுநிலையான அமைப்பாகச் செயல்பட்டு, நகர்ப்புறங்களில் நிலவும் வீட்டு வசதி தேவைகளை முறைப்படுத்தவும், வாடகை சந்தையை வலுப்படுத்தவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது..
ஆணையங்களில் தீரும் சிக்கல்கள்
அதனால்தான் தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப, வாடகை வீட்டுவசதி ஆணையங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் குறித்து பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி, வீடு அல்லது நிலத்தை வாடகைக்கு விடுவோர் அது தொடர்பான ஒப்பந்த விவரங்களை அந்தந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வாடகை வீட்டுவசதி ஆணையத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்... இத்தகைய ஆணையங்களில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே வாடகை வீட்டுவசதி நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கின்றன...
மயிலாடுதுறை, செங்கல்பட்டு
ஆனால், சமீபத்தில் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி போன்ற புதிய மாவட்டங்களுக்கு என தனியாக புதிய ஆணையங்கள் இன்னும் முறையாக சீரமைக்கப்படவில்லை.,..
இப்போதைக்கு இந்த புதிய மாவட்டங்களில் உள்ள வருவாய் கோட்டங்கள், பழைய மாவட்டங்களின் பெயரிலேயே பதிவேபுதிய ஆணையங்கள் அமைக்கப்பட்டால் பொதுமக்கள் தங்கள் இடத்திற்கு அருகிலேயே ஒப்பந்தங்களைப் பதிவு செய்ய முடியும் மற்றும் வழக்கு விசாரணைகளுக்காகப் பழைய மாவட்டத் தலைமையிடங்களுக்கு அலைவது குறையும்.
புதிய பணியிடங்கள், பழைய தரவுகள்
இருப்பினும், இதற்கான புதிய பணியிடங்களை உருவாக்குதல், தரவுகளைப் பழைய மாவட்டப் பதிவேடுகளில் இருந்து பிரித்தெடுத்தல் போன்ற நிர்வாகப் பணிகளால் தொடக்கத்தில் காலதாமதமும் சில நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
மாவட்ட எல்லைகளும் வருவாய் நிர்வாக அமைப்புகளும் மாறியுள்ள நிலையில், பழைய மாவட்ட பெயர்களிலேயே ஆணையங்கள் செயல்படுவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....
எனவே, நிர்வாக வசதிக்காகவும் சட்டப்பூர்வமான பதிவுகளை எளிமைப்படுத்தவும், புதிய மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப வாடகை வீட்டுவசதி ஆணையங்களை விரைந்து மாற்றி அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தல்கள் கிளம்பி உள்ளனவாம்..
நடைமுறை சிக்கல்கள்?
ஒருவேளை, புதிய ஆணையங்கள் அமைக்கப்பட்டால் பொதுமக்கள் தங்கள் இடத்திற்கு அருகிலேயே ஒப்பந்தங்களை பதிவு செய்ய முடியும்.. வழக்கு விசாரணைகளுக்காகப் பழைய மாவட்ட தலைமையிடங்களுக்கு அலைவதும் குறையும்.
ஆனாலும், இதற்கான புதிய பணியிடங்களை உருவாக்குதல், தரவுகளை பழைய மாவட்டப் பதிவேடுகளில் இருந்து பிரித்தெடுத்தல் போன்ற நிர்வாகப் பணிகளால் தொடக்கத்தில் காலதாமதமும் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!!












Click it and Unblock the Notifications