திசை மாறிய காற்று! தமிழ்நாட்டிற்கு வந்த நல்ல செய்தி.. மின்சார வாரியத்தின் அதிரடி உத்தரவு! இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இனிப்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டு உள்ளது. கிட்டத்தட்ட தினசரி வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை எட்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது வரை வெயில் எங்கும் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. பொதுவாகவே வெயில் அதிகரித்தால் மின்சார தேவையும் அதிகரிக்கும்.

Good news Tamilnadu Electricity production to increase in coming days as wind mill started working

வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. அதேபோல் மக்கள் பலரும் வீடுகளில் நாள் முழுக்க ஃபேன் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்துவிட்டது.

முக்கியமாக பலர் புதிதாக ஏசி வாங்குகிறார்கள். அதோடு நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடும் வெயில் காரணமாக மக்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது போலவே தற்போது மின்சார தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இதனால் மின் சாதனங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டின் மின் தேவை கிட்டத்தட்ட 4 ஆயிரம் மெகாவாட் என்ற அளவை எட்டி உள்ளது. 41.30 கோடி யூனிட்கள் என்ற அளவை தாண்டி தமிழ்நாட்டின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக சென்னையில் வெயில் மண்டையை பிளந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. இதனால் சென்னையில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.

மின்தடை:

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பலர் வீடுகளில் ஏசியை போட்டுவிட்டு மின்சார தேவையை உயர்த்தி உள்ளனர்.

இதனால் சென்னையில் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த மின்தடைகளுக்கு இடையில்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இனிப்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

என்ன செய்தி? :

அதன்படி தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ காற்று காரணமாக மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று வீச தொடங்கி உள்ளது. இதனால் அங்கு உள்ள காற்றாலைகளில் மின்சாரம் தயாரிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

Good news Tamilnadu Electricity production to increase in coming days as wind mill started working

முக்கியமாக 2 நாட்களாக ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் அங்கே மேலும் மின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒரு பகுதியில் மட்டும் ஒரு வினாடிக்கு 9 மீட்டர் காற்று அதிகம் உள்ளதால் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

அங்கே சராசரி மின்உற்பத்தி 20 ஆயிரம் யூனிட்டாக இருந்த நிலையில் தற்போது 23 ஆயிரம் யூனிட்டாக உயர்ந்து உள்ளது. வரும் நாட்களில் இது 26 ஆயிரம் யூனிட்டாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின் உற்பத்தி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் மின்சார ஊழியர்கள் மின்தடை ஏற்படும் இடங்களில் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். மின்தடை புகார் வந்தால் தடை உடனடியாக அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சாரத்துறை சார்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+