தமிழகம் மற்றும் சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
[தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்]

இன்றும் நாளையும்
இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியிருப்பதாவது, சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.

காற்றழுத்தம்
மன்னார் வளைகுடா முதல் இலங்கை கடற்கரை நீடிக்கும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு நல்ல மழை பெய்யும். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் குறைந்த காற்றழுத்தம் உருவாக ஏற்ற இடமாகவும் உள்ளது.

தமிழகம் முழுவதும்
இன்று மற்றும் நாளை நல்ல மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களின் பெயர்களை கூற முடியாது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.

மேற்கு மாவட்டங்களிலும்
திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை நாளையும் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். மேலும் மேற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களான கோவை, ஈரோடு , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மாலை மற்றும் இரவில் மழையை பெறும்.

அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர்
ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழை பெய்யும். அனைத்திற்கும் மேலாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு நன்றாக உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications