பிக்பாஸூடனான நீண்டகால மோதலின் உச்சம்.... எம்.பி. அதிரடியாக நீக்கப்பட்டதன் பரபர பின்னணி
சென்னை: அதிமுக அணிகள் இணைந்த நிலையில் தங்களது கோபத்தை எம்.பி. மீது காட்டி அதிரடியை தந்தது சசிகலா குடும்பம். அந்த எம்.பி. மீதான கோபத்தின் பின்னணியை திரைப்படம் போல விவரிக்கின்றனர் டெல்டா அதிமுகவினர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக நால்வர் அணியில் இருந்தார்.. அவரை சட்டசபை தேர்தலில் லாவகமாக வியூகம் வகுத்து தோற்கடித்தது சசிகலா குடும்பத்தின் பிக்பாஸ்.
தமது தோல்விக்கு பிக்பாஸ்தான் காரணம் என அவரும் நன்கு அறிந்தே வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க அதிர்ந்து போனது பிக்பாஸ் தரப்பு.

விவேகமானவருடன் நெருக்கம்
தொடர்ந்து அமைதியாக எடப்பாடி அணியில் நீடித்து வந்தார் அந்த எம்.பி. அதேநேரத்தில் பிக்பாஸுக்கு எதிரான சென்னை உறவுகளுடன் நெருக்கமானவராகவும் வலம் வந்தார். அதிலும் குறிப்பாக விவேகமானவரின் தீவிர ஆதரவாளராகவே மாறி இருந்தார்.

இணைப்புக்கு தூதர்
இந்த நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சு தொடங்கியது. இந்த இணைப்புக்கு தூதுவராகவும் இருந்தார் எம்.பி. அப்போது ஓபிஎஸ் தரப்பில் விவேகமானவரிடம் இருந்து நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டபோது கடுமையாக எதிர்த்தார் எம்.பி.

விவேகமானவருக்கு அதிர்ச்சி
ஒருகட்டத்தில் பிக்பாஸும் சென்னை உறவுகளும் கைகோர்க்க முழுமையாக எடப்பாடி தரப்பில் இணைந்துவிட்டார் எம்.பி. இதைத் தொடர்ந்து விவேகமானவருக்கு எதிராகவும் காய்நகர்த்தலை தொடங்கினார் அவர். இதில் விவேகமானவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாம்.

மேலூர் கூட்டம்
இதற்கு பதிலடி தரும் வகையில் எம்.பி.யின் கோட்டையில் இருந்து பெருமளவு வாகனங்கள் மேலூரை நோக்கி சென்றதாம். ஆனால் எம்.பியோ, பிக்பாஸின் மகன் மேலூர் கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்ததை பிரச்சனையாகவும் உருவாக்கினாராம் எம்.பி.

சசிக்கு எதிராக அறிவிப்பு
இப்படியான மோதலின் உச்சமாக அணிகள் இணைந்த போது சசிகலாவை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என எம்.பி. அறிவிக்க கொந்தளித்தாராம் பிக்பாஸாம். அவருடைய ஆலோசனையின் பேரில்தான் எம்பியை நீக்கி வெளியிடப்பட்ட அறிவிப்பாம். ஆனால் ஒருவழியாக பிக்பாஸ் கூட்டத்தை அனுப்பிவிட்டோம் என நிம்மதி பெருமூச்சில் இருக்கிறாராம் எம்.பி.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications