ஆட்டம் முடியும் வரை ஆட்டைய போடு... கவலைப்படாமல் வாங்கி வாங்கி குவிக்கும் 'தல'
சென்னை: அடுத்து என்ன நடக்குமோ என என்னதான் அமைச்சர்கள் பீதியில் உறைந்துகிடந்தாலும் 'தல' இந்த ரணகளத்திலும் வாங்கி வாங்கி குவிப்பதில் சளைக்கவே இல்லை என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐந்தில் ஒன்றாக இருந்த போதும் ஆட்டுவித்த கோஷ்டிக்கு அடிமையாக இருந்தவர் தல. இதனாலேயே காலச் சூழலில் எல்லாமுமே தேடி வந்தது.

விழிபிதுங்கும் அமைச்சர்கள்
தார்க்குச்சியுடன் டெல்லியில் இருந்து குடைச்சல் குமாஸ்தாக்கள் வகைதொகையில்லாமல் நெருக்கடி கொடுக்கிறார்கள்.. இதனால் அமைச்சர்கள் பலரும் என்னதான் நடக்குமோ என விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள்.

தேர்தல் வருதாம்
இன்னொருபக்கம் ஆரூடக்காரர்கள் இதோ வருது.. அதோ வருது.. தேர்தல் வந்தேவிட்டது என ஏகத்துக்கும் கிளப்பி விடுகிறார்கள்... ஆனால் 'தல' எதைப் பற்றியுமே கவலைப்படாமல் ஹாயாக வலம் வருகிறார்.

வளைத்துப் போடு..
அத்துடன் சந்தடிசாக்கில் வளைத்துப் போடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறாராம். அண்டை மாநிலத்தின் மிக முக்கியமான மகிழ்ச்சி ஹோட்டலை கபளீகரம் செய்துவிட்டாராம் தல..

ஆட்டம் முடியும் வரை...
அங்கிட்டு இன்னொரு மாநில எல்லையில் 600 ஏக்கர் நிலம் அபேஸாகிவிட்டதாம். அடுத்த ரெய்டை எதிர்நோக்கியிருக்கும் அந்த சவுண்டு அமைச்சர்தான் பார்டனராம்.
ஆட்டம் முடியப் போற கடைசி நிமிடம் வரைக்கும் 'ஆட்டைய' போடுறதை விடமாட்டாங்களோ என்ற புலம்பல் கோட்டை சுவர்களில் எதிரொலிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications