காவிரி பந்த்: திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு!
தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திண்டுக்கல் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் போது கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி என்கிற இடத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசித்தாக்குதல் நடத்தியதில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்திலும் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பத்து அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்- பழநி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, லியோனி மற்றும் பழநி எம்.எல்.ஏ. செந்தில்குமார் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications