அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக்... வெறிச்சோடிய பள்ளிகள்... தேர்தல் பணிகளும் முடக்கம்
நெல்லை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இதனால் வகுப்புகள் வெறிசோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் கடந்த 15ம தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

ஆசிரியர்கள் ஆப்செண்ட்...
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் யாரும் வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை. சில வகுப்புகளில் ஆசிரியர் பயிற்றுனர்கள் பாடம் நடத்தினர்.

336 ஆசிரியர்கள்...
இதுகுறித்து தொடக்க கல்வி துறை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில், ‘நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 336 ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிக்கு வரவில்லை. பாளையங்கோட்டை, நகர, வட்டாரத்தில் 6 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

கடும் பாதிப்பு...
பாளையில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். அங்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆசிரியர்கள் ஸ்டிரைக் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பல தொடக்க கல்வி துறை பள்ளிகளில் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி...
இறுதி தேர்வு நெருங்கி வரும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களும், பெற்றோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தேர்தல் பணிகளும்...
அரசு ஊழியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் மட்டுமின்றி சட்டசபைத் தேர்தல் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வேலைகளில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியல்...
சட்டசபை தேர்தலை முன்னிடடு கடந்த மாதம் 20ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சிறப்பு முகாம்கள்...
ஜன 31, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலை குறித்து வருகிற 29ம்தேதிக்குள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவு...
ஆனால் வாக்குசாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பலர் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் உள்ளனர். வீடு வீடாக சென்று விசாரணை நடத்திய பட்டியலை தினமும் மாலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்...
நெல்லை மாவட்டத்தி்ற்கு ஏற்கனவே பல மாநிலங்களில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவற்றை பரிசோதித்த பார்க்க பெல் நிறுவன அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் வருவாய் துறையினர் போராட்டத்தில் இருப்பதால் பெல் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தது ஓத்தி வைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications