வெளி மாநிலத்தில் நீட் எழுத போகும் மாணவர்களெல்லாம் யாருன்னு நினைச்சீங்க.. செங்கோட்டையன் பதிலை பாருங்க
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள 10 மையங்களில் நீட் தேர்வு எழுதவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த விழாவில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள 10 நீட் தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கள நிலவரத்தை விசாரித்து பார்த்தால் அது வேறு மாதிரி உள்ளது. உதாரணத்திற்கு, நெல்லை டவுன் அரசு பள்ளி மாணவி சக்தி என்பவர், கேரளாவின் எர்ணாகுளத்தில் தேர்வு எழுத உள்ளதாக கூறுகிறார் உள்ளூர் நிருபர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்த விவரம் பள்ளிக் கல்வி துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டிற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளது குறித்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சரின் மாறுபட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications