சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி...? பரிசீலனை செய்யுமா தமிழக அரசு
சென்னை: ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அண்டா, குண்டா, என எதற்கும் உதவாத பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்த்து நிரந்தரமாக உதவும் வகையில் அரசுப் பணி வழங்கினால் அவர்களின் குடும்பமும் பயன்பெறும்.
இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாடுபிடி வீரர்கள்
ஆண்டுதோறும் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் பிரபலமான ஜல்லிக்கட்டி போட்டி என்றால் மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடைபெறுவதை கூறலாம். இதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர், சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஜல்லிக்கட்டும் பிரபல்யமானவை.

காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறி பாயும் காளைகளை அடக்க ஏராளமான காளையர்கள் களத்தில் நின்று தங்கள் வீர தீரத்தை காட்டுவர். இதில் சிலர் மட்டுமே சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்படுவர். அதுவும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி அனைவர் முன்னிலையிலும் இந்த தேர்வு இருக்கும்.

அண்டா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது என்பதால் அங்கு மட்டும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக தரப்படுகிறது. மற்றபடி மற்ற மாடுபிடி வீரர்களுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பரிசுப்பொருட்கள் கிடைப்பதில்லை. அண்டா, குண்டா, பீரோ, கட்டில், சைக்கிள் போன்ற பொருட்களே அதிகளவில் வழங்கப்படுகிறது.

கவுரவிப்பு
இந்நிலையில் ஆண்டுதோறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கி அவர்களை கவுரப்படுத்தினால் அது அவர்களின் எதிர்காலத்திற்கும், குடும்பத்திற்கும் நிரந்தரமாக பயன் தரும். இது குறித்து பரிசீலித்து ஒரு நல்ல அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications