அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்... சட்டசபையில் ஜெ. வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா, பேரவை விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கான சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30-ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.

அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்வரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அதாவது உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையும் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என அவர் கூறியிருந்தார்.
தற்போது இது தொடர்பாகவும் சண்முகம் மற்றொரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், இந்த தொகையை வாரிசுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக வழங்கும். பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications