ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சட்டப்பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், நடத்தி வரும் போராட்டம் இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இளைஞர் படை மெரினா நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்துக்கின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக சென்னை, கோவை, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும், அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே விடுமுறையை அறிவித்துள்ளன.

அம்பேத்கார் சட்டபல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பள்ளி்க்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் 22ஆம் தேதிவரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications