நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி ஆசிரியை.. வேலையை உதறினார்!
நீட் தேர்வுக்கு எதிராக அரசு பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்தார்.
விழுப்புரம்: நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்தார்.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு கலைந்துவிடும் நிலை உள்ளது. இதற்கு அனிதா என்ற அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

நீட்டுக்கு எதிராக போராட்டம்
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டத்துக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ராஜினாமா செய்தார்
இதனால் தனது ஆசிரியை பணியை சபரிமாலா ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி மீதான அக்கறை
இந்த காலத்தில் உதவியாளர் வேலை கிடைத்தாலும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரிகள் போராடி வரும் வேளையில் தனக்கு கிடைத்த ஆசிரியை பணியை நீட் தேர்வுக்காக ராஜினாமா செய்ததில் இருந்து வருங்கால இந்தியா மீதும் மாணவர்கள் மீதும் அவர் வைத்துள்ள அக்கறை புலப்படுகிறது.
|
நீட் கடினம்
மேலும் நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு கடினம் என்பதும் இவரது ராஜினாமா மூலம் வெளிப்படுகிறது. இன்றும் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications