ரூ.400 கோடி கறுப்பு பணத்தை அழிக்க ரூ.18 லட்சம் கோடியை வீணாக்குவதா- ப.சிதம்பரம்

ரூ.400 கோடி கறுப்புபணத்தை அழிக்க ரூ.18 லட்சம் கோடியை வீணாக்குவதா என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது ஏன் என்றும் கள்ள நோட்டை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்றும் ப.சிதம்பரம் கேள்வி கூறியுள்ளார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. அதேபோல், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் அறிவிக்கப்பட்ட இடங்களில் கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

Government waste 18 lakhs crore for 400 crore Black money 400 crore

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என வரவேற்கப்பட்டாலும், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க ரூ.18 லட்சம் கோடியை வீணாக்குவதா என்று ப.சிதம்பரம் கேட்டார்.

ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பால் கறுப்புப் பணத்தை ஒழிக்கமுடியாது என்றும் ப.சிதம்பரம் கூறினார். ரூ.500, ரூ.1,00 நோட்டுகள் செல்லாது என ஏன் அறிவித்தார்கள் என தெரியவில்லை என்று கூறிய ப.சிதம்பரம், மத்திய அரசின் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+