பெரும்பான்மை இல்லாத எடப்பாடி- ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியிடம் முறையீடு- துரைமுருகன்
எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாத நிலையில் ஜனாதிபதியை சந்திப்போம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, ஜெ. அன்பழகன், ராஜேந்திரன் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது. மைனாரிட்டி அரசு ஆட்சி செய்யக் கூடாது என்கிறது அரசியல் சாசனம்.

எதிர்க்கட்சிகள் பலம்
தமிழக சட்டசபையில் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 233 எம்.எல்.ஏக்களில் திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 மற்றும் தினகரன் கையில் 22 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.

113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு
தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணி பிரிந்த நேரத்தில் 15 நாட்களுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டவர் ஆளுநர்.

பெரும்பான்மையை நிரூபிக்க...
தற்போதும் அதே போல ஒரு நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம். சட்டசபையை உடனே கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம்.

உரிய நடவடிக்கை
ஆளுநரும் நடக்கின்றன அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு வருகிறேன். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திப்போம்
தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த நிலைக்கு ஆளுநர் செல்லவிடமாட்டார் என நம்புகிறோம்.

கனிமொழி கருத்து
இவ்வாறு துரைமுருகன் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்றார். காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, முஸ்லிம் லீக் அபுபக்கர் ஆகியோரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications