For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடுபிடிக்கும் நிர்மலாதேவி பற்றி சந்தானம் குழுவின் விசாரணை- இன்றைய பரபர நிகழ்வுகள் ஒருக்விக் பார்வை!

புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இன்றைய விசாரணையின் முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலாதேவி பற்றி சந்தானம் குழுவின் விசாரணை- வீடியோ

    மதுரை : உயர்கல்வித்துறையில் புயலைக் கிளப்பியுள்ள புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் நோக்கம் அவருடைய குற்றப்பின்னணியில் யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளார். சந்தானம் விசாரணையில் இன்று என்னென்ன குறிப்பிடும்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன என ஒரு க்விக் பார்வை இதோ.

    ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் இன்று காலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம் விசாரணை நியாயமாக நடைபெறும் என்றும் முழு அறிக்கை ஆளுநரிடம் தாக்கல் செய்யப்படும் என்றார். இன்று காலை முதல் சந்தானம் குழு நடத்திய விசாரணையின் முழு விவரங்கள் உங்கள் பார்வைக்காக:

    Governor instituted retired IAS officer Santhanams first day investigation special points

    • மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தி வருகிறார் அதிகாரி சந்தானம்.
    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் இருந்து விசாரணை தொடங்கியது.
    • நிர்மலா தேவி தொலைபேசி உரையாடலில் தெரிவிக்கும் பேராசிரியர்கள் பற்றி சந்தானம் கேள்வி.
    • நிர்மலா தேவி பல்கலை கழகத்திற்கு எப்போது என்ன பயிற்சிக்காக வந்திருந்தார் என்றும் விசாரணை
    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையிடமும் சந்தானம் விசாரணை நடத்தினார்.
    • கொடைக்கானல் அன்னை தெரசா கல்லூரி முதல்வரிடமும் சந்தானம் விசாரணை நடத்தியுள்ளது. மார்ச் 13ம் தேதி அன்னைதெரசா கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஏன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்தது, அந்த நிகழ்ச்சியில் நிர்மலா தேவி பங்கேற்றாரா என்றும் சந்தானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • பேராசிரியை நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்க சந்தானம் அறிவிப்பு
    • ஏப்ரல் 21,25,26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 வரை எழுதது மூலம் மக்கள் தகவல்களை தரலாம் என விசாரணை அதிகாரி தகவல்.
    • நிர்மலா தேவிக்கு எதிரான ஆதாங்கள் இருப்பின் அதனையும் விசதாரணைக்குழுவிடம் அளிக்கலாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் இன்று சந்தானம் விசாரணை நடத்தினார்.
    • நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியிலும் சந்தானம் ஐஏஎஸ் விசாரணை நடத்த உள்ளார்.

    English summary
    Governor instituted retired IAS officer Santhanam begins investigation at Madurai and here are the important point in his first day of probe about Broker preofessor Nirmaladevi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X