ஆளுநர் மத்திய அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்கவேண்டும்.. முதல்வர் நாராயணசாமி!
ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் பாலாமாக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் பாலாமாக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கும் அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாமல் இருந்து வருகிறது. ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுப்பதாக அமைச்சர்களும், அரசு பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஆளுநரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஜிஎஸ்டி வரியால் மக்கள் வீடு, மனை வாங்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications