அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே! ஆளுநர் காலில் விழுந்த பெண்.. பதிலுக்கு ஆர்.என்.ரவி செய்த நெகிழ்ச்சி
சென்னை: பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரரின் தாய் விருது வாங்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் காலில் விழ உடனே பதறிய அவரும் அந்த அன்னையின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் அன்னையர் தினம் மே 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். முதல்வர் ஸ்டாலினும் தனது தாயிடம் ஆசி வாங்கும் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்.

அத்துடன் அன்னையர் தின வாழ்த்து மடலையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அன்னையர் தினத்தையொட்டி நேற்றைய தினம் ஆளுநர் மாளிகையில் விழா நடந்தது.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவருடைய மனைவி லட்சுமி ரவியும் கலந்து கொண்டனர். அப்போது சிறந்த தாய்மார்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். அந்த வகையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய் நாகலட்சுமி, விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷின் தாய் மீனாட்சி சந்திரசேகர், திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாய் நாகமணி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின போது மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்னையர்களின் வருகையால் இந்த ஆளுநர் மாளிகை புனிதம் பெற்ற இடமாக மாறிவிட்டது. அன்னையர்கள் வருகையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடமாக ராஜ்பவன் மாறியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது.
தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை. மொழி, கலாச்சாரம் கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனிடம் உள்ள அன்பு குணங்கள் யாத் மூலம் மட்டுமே வருகின்றன. நான் பராசக்தி கடவுளை வணங்குவேன். நான் கண்களை மூடும் நேரத்தில் பராசக்தி உருவத்தில் என் தாயைப் பார்க்கிறேன்.

வளர்ந்து வரும் உலகில் தற்போது உள்ள இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். தாயின் அன்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற அழகான பாடலை இளையராஜா இசை அமைத்துள்ளார். அந்தப் பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை. நாம் எங்கு இருந்தாலும் நம் அம்மாவை கைவிடக் கூடாது.
தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் வெளிநாட்டுக்கு செல்கிறார்கள். தங்களுடைய தாய், தந்தையை தனியாக விட்டு செல்கிறார்கள், ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை கைவிடுகிறார்கள். ஒரு போதும் தங்களுடைய தாயை யாரும் கைவிடக் கூடாது என கூறினார். இதனிடையே நிகழ்ச்சியின் போது பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன் ராஜின் தாய் ஞானசுந்தரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கும் நேரத்தில் ஆளுநர் காலில் விழுந்தார். உடனே பதறிய ஆளுநர் பதிலுக்கு அந்த தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தால் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications