Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கர விபத்தில் பலியான உயிர்கள்.. கலங்கி வேதனை தெரிவித்த ஆளுநர் ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று நடந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் லாரி, கார்கள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது லாரி மற்றும் கார்கள் தீப்பிடித்து எரிந்தன. ஒரு லாரி பாலத்தில் இருந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Governor RN Ravi and Udhayanidhi Stalin expressed their grief regarding tragic accident in Thoppur

தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "தருமபுரியில் தொப்பூர் கணவாய் சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வருத்தமளிக்கிறது. உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Governor RN Ravi and Udhayanidhi Stalin expressed their grief regarding tragic accident in Thoppur

தொப்பூர் கோர விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தர்மபுரி - தொப்பூர் கணவாய் பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இத்துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

தருமபுரி எம்.பி செந்தில் குமார் தனது சமூக வலைதள பதிவில், "தருமபுரியில் தோப்பூர் கணவாய் பிரிவில் உயர் நெடுஞ்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த இதற்காகத்தான் வலியுறுத்தி வருகிறோம். தோப்பூர் கணவாயில் இன்று நடந்த விபத்தின் காட்சிகள் இவை." எனத் தெரிவித்து, மத்திய சாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்துள்ளார்.

தொப்பூர் கணவாய் பகுதிதான் இந்தியாவிலேயே மிக அதிகமாக நடைபெறும் பகுதியாக உள்ளது. இதனை தடுக்க ரூ.775 கோடி மதிப்பில் Elevated Highway அமைக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து ரூ.775 கோடி டெண்டர் அறிவிப்பு வெளியானது. அங்கு Elevated highway அமைக்கப்படுவதன் மூலம் விபத்துகள் பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+