ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? - ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம்
சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர் மரணத்துக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்து, அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்ததும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தீவிர காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. பின்னர் திடீரென மோசமடைந்தது. 50 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருடைய உடல்நிலை சற்று தேறியது.
இதையடுத்து நவம்பர் 19-ந் தேதி அவர் பல்நோக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
டிசம்பர் 4-ந் தேதி மாலை நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் உடனே சென்னைக்கு விரைந்து வந்தேன்.
மருத்துவமனையில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து மருத்துவனை தலைவர் மற்றும் டாக்டர்கள் எனக்கு விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு நுரையீரல் செயல்பாட்டுக்கான எந்திரமான எக்மோ வழியாக சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். எனினும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது.
இனி காப்பாற்ற வழியில்லை என்ற நிலையில், டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதே நாள் இரவு அ.தி.மு.க. கட்சியின் பொருளாளரும், மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் என்னை சந்தித்தார்.
அப்போது ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை அ.தி.மு.க.வின் சட்டமன்றத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் அளித்தார்.
இதனால் நான் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164(1)ன் கீழ் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக நியமித்து அரசு அமைக்குமாறு உத்தரவிட்டேன்.
இதனை தொடர்ந்து முதல்வராக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவை பட்டியலை என்னிடம் அளித்தார். டிசம்பர் 6-ந் தேதி பகல் 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications