முதல்வராகிறார் சசிகலா.. எப்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்?
அதிமுக பொதுச் செயலாளர் சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், உருவான பரபரப்பை அடுத்து பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் டெல்லி விரைகிறார்.
சென்னை: உதகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டுள்ளார்.
அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், உதகைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள கவர்னர் வித்யாசாகர ராவ் சென்னைக்கு அவசரமாக திரும்புவதாக இருந்தது. ஆனால், டெல்லிக்கு சென்று மத்திய அரசோடு ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ள கவர்னர் வித்யாசாகர் ராவ். கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மத்திய அரசிடம் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை திரும்பும் கவர்னரை , ஓபிஎஸ் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுக்க உள்ளார். மேலும், சட்டசபைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகலை ஓபிஎஸ் கவர்னரிடம் கொடுக்க உள்ளார். அதன் பிறகு சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் நாள் தெளிவாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications