சென்னை விமான நிலையத்தை செம்மைபடுத்த சிறப்பு குழு- மத்திய அரசு முடிவு
சென்னை: சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையம் கடந்த 2013-ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கண்ணாடிகள் விழுந்து உடைவதும், மேற்கூரை பெயர்ந்து விழும் சம்பவங்களும் தொடர் கதையாகி வந்தன. கடந்த மாதத்தில் மட்டும் 3 முறை இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விமான போக்குவரத்து துறை அமைச்சக இணை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு சமீபத்தில் சென்னை விமான நிலைய அமைப்பு மற்றும் வசதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என அந்த குழு தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழுந்து உடைவதும், மேற்கூரை பெயர்ந்து விழும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் சென்னை விமான நலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications