டயர்ட் ஆனா தூக்கம்.. கை கால் பிடித்து விட மாணவர்களின் மசாஜ்.. சூப்பர் வாத்தியார்!
மாணவர்களை தவறாக வழி நடத்திய ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

திண்டுக்கல்: என்ன மாதிரியான ஆசிரியர் இவர்.. மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு நல்ல பழக்கம் கூட இல்லையே இவரிடம்.
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் கணேஷ், எப்போதெல்லாம் டயர்ட்-ஆ இருக்கிறதோ அப்போதெல்லாம் பள்ளி வளாகத்திலேயே தூங்க ஆரம்பித்துவிடுவாராம். தினமும் மதிய நேரத்தில் சாப்பிட்டு கொஞ்சநேரமாவது இவருக்கு தலைசாய வேண்டுமாம்.

கந்து வட்டி பிசினஸ்
பிறகு வகுப்பிற்குள் நுழைந்ததும் பெரும்பாலும் பாடமே எடுக்க மாட்டாராம். மாணவர்களை கூப்பிட்டு தன் உடம்பிற்கு மசாஜ் செய்ய சொல்லுதே வாடிக்கையாக இருந்திருக்கிறது. அப்படியும் ஆசிரியருக்கு போராடித்தால் வகுப்பறையிலேயே சீட்டுக்கட்டு விளையாட ஆரம்பித்துவிடுவாராம். வாங்குற சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்க்காமல் இதே பிழைப்பாக நாட்களை ஓட்டி வந்துள்ளார் இந்த ஆசிரியர். இதைதவிர வட்டிக்கு சீட்டுக்கு விடும் வேலையில் இறங்கியுள்ளார். பள்ளிக்குள்ளேயே இந்த கந்து வட்டி பிஸினஸ் நடந்துள்ளது.

பெற்றோர் போராட்டம்
இந்த ஆசிரியர் செய்த எல்லாவற்றையும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் சென்று முறையிட்டு அழுதுள்ளனர். எங்களுக்கு சரியாகவே பாடம் நடத்த மாட்டேங்கிறார் என்று புகாரும் சொல்லியுள்ளார்கள். அதற்கேற்றார் போல மாணவர்களின் மார்க் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போவதையும் அறிந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டார்கள். அந்த ஆசிரியரை எப்படியாவது இடமாற்றம் செய்தே ஆக வேண்டும் என முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.

சாட்டை படம்
இப்படி பள்ளிக்குள் தூங்குவது, வட்டிக்கு பணம் விடுவது என்ற இதுபோன்ற அழுக்கு போக்கைதான் "சாட்டை" படம் தோலுரித்து காட்டியது. எவ்வளவுதான் சமுதாயத்தை சீர்திருத்தக்கூடிய படங்கள் வந்தாலும் மனித புத்தி தானாகத்தானே திருந்த வேண்டியுள்ளது? ஒரு பள்ளி ஆசிரியர் என்பதையும் மறந்து, அரசு ஊழியர் என்பதையும் மறந்து, நாளைய தூண்கள் என்று நம்பப்படும் மாணவர்களின் முன்னாலேயே சீட்டு விளையாடுவதும், தூங்குவதும், அவர்களை மசாஜ் செய்ய சொல்வதும் என இவ்வளவு அட்டூழியம் செய்த இந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் என்ன நிர்வாகம் எடுக்க போகிறது?

நம்பிக்கை நட்சத்திரங்கள்
எப்படியோ துறை ரீதியான நடவடிக்கை இதுபோன்ற ஆசிரியர் மீது எடுக்கப்படும். இது வழக்கம்தான். ஆனால் மற்றொரு ஆசிரியர் இதுபோல் நாளை உருவாகி வருவார்களே? இதுபோன்ற ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்குள் செயல்படாமல் தடுக்க வேற ஏதாவது வழி பள்ளிக் கல்வித்துறையிடம் இருக்கிறதா? அப்படி இருந்தால் உடனடியாக அதை செயல்படுத்தி நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை காப்பாற்ற முயல வேண்டும்!












Click it and Unblock the Notifications