ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. சாலை மறியல், ரயில் மறியல் என போர்க்களமாக தமிழகம் மாறியுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் வெள்ளிக்கிழமை ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருப்பூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது அரசு பள்ளிகளுக்கும் பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications