மதுரை மண்டலத்தில் 201 டாஸ்மாக் கடைகள் மூடல்... சேலம் மண்டலத்தில் வெறும் 48 கடைகள்தான்!
சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பின்படி சென்னையில் 58 கடைகளும், கோவையில் 60 கடைகளும், மதுரையில் 201 கடைகளும் மூடப்படுகின்றன. திருச்சியில் 133 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் 48 கடைகள் மூடப்பட உள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத் தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடைகளை மூடுவதற்கான உத்தரவை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ளார். மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலம்
மதுரை மண்டலத்தில் மொத்தம் 201 கடைகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த மூடப்படும் கடைகள் விபரம்.
மதுரை தெற்கு 21
மதுரை வடக்கு 16
திண்டுக்கல் 10
ராமநாதபுரம் 36
விருதுநகர் 27
சிவகங்கை 43
நெல்லை 9
தூத்துக்குடி 30
கன்னியாகுமரி 6
தேனி 3

திருச்சி மண்டலம்
திருச்சி மண்டலத்தில் 133 கடைகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த மூடப்படும் கடைகள் விபரம்.
திருச்சி 14
நாகப்பட்டினம் 16
தஞ்சாவூர் 16
புதுக்கோட்டை 14
கடலூர் 15
கரூர் 14
திருவாரூர் 8
விழுப்புரம் 29
பெரம்பலூர் 7

கோவை மண்டலம்
கோவை மண்டலத்தில் 60 கடைகள் மூடப்படுகின்றன.
கோவை வடக்கு 1
கோவை-தெற்கு 4
திருப்பூர் 8
ஈரோடு 16
நீலகிரி 31
மொத்தம் 60

சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்தில் மொத்தம் 58 கடைகள் மூடப்படுகின்றன.
சென்னை வடக்கு 2
மத்திய சென்னை 3
தென் சென்னை 2
காஞ்சிபுரம் வடக்கு 13
காஞ்சிபுரம் தெற்கு 3
திருவள்ளூர் கிழக்கு 16
திருவள்ளூர் மேற்கு 19

சேலம் மண்டலம்
சேலம் மண்டலத்தில் மொத்தம் 48 கடைகள் மூடப்படுகின்றன.
தருமபுரி 1
கிருஷ்ணகிரி 6
நாமக்கல் 11
வேலூர் 8
திருவண்ணாமலை 18
அரக்கோணம் 4

முழு மது விலக்கு எப்போது?
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல டாஸ்டாக் கடைகளை படிப்படியாக மூடும் வேலைகளை தொடங்கி விட்டார் ஜெயலலிதா. டாஸ்மாக் பணி நேரம் குறைக்கப்பட்டும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது எனவே பார்களை முழுவதும் மூடிவிட்டு தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications