பஞ்சர் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து - தாத்தாவும், பேரனும் பரிதாப பலி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே விராலிமலையில் பஞ்சர் கடைக்குள் அரசுப் பேருந்து ஒன்று புகுந்தது. இவ்விபத்தில் கடையில் பஞ்சர் ஒட்ட நின்று கொண்டிருந்த தாத்தா மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
விராலிமலையைச் சேர்ந்தவர் மணிபிள்ளை. இவரது 4 வயதான பேரன் மு. ஹரிபிரசாத். இவர்களுக்கு சொந்தமான சரக்கு வேனை விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலை மாதிரிப்பட்டி பிரிவு அருகே உள்ள ஒரு பஞ்சர் கடையில் நிறுத்தி பஞ்சர் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று மாதிரிபட்டி குறுக்கு சாலையை கடக்க முயன்ற மணல் லாரியின் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பஞ்சர் கடைக்குள் புகுந்தது. இதில் பஞ்சர் கடையில் இருந்த மணி மற்றும் அவரது பேரன் ஹரிபிரசாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்து பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். காயமடைந்த பேருந்து ஓட்டுநர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications