கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. உள்பட 8 நிறுவனங்கள் மீது புதிதாக 15 வழக்குகள்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலும் 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.141 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீஐஸ்வர்யா கிரானைட் நிறுவனத்தின் 2 பங்குதாரர்கள், 4 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மதுரை நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி சரியான தகவல்களை வரும் 9ம் தேதிக்குள் அளிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கீழவளவு, இ.மலம்பட்டி உள்பட 7 கிராமங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அடுக்கி வைத்துள்ள 10,509 கிரானைட் கற்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி அவர் பி.ஆர்.பி. உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீது 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications