கிரானைட் முறைகேடு- மேலூர் நீதிமன்றத்தில் 3633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் பிஆர்பி, மதுரா நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட
மதுரை: கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி, மதுரா உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அவற்றை அரசு நிலங்களில் அனுமதியின்றி அடுக்கி வைத்தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி, மதுரை, ராஜசேகரன், ஆர்வி எண்டர்பிரைசஸ், ஓம் ஸ்ரீ கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிஆர்பி, மதுரா, ராஜசேகரன் ஆகிய 3 நிறுவனங்கள் மீது கிரானைட் முறைகேடு தொடர்பாக 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications