சகாயம் குழுவில் துணை கலெக்டர் உள்பட 15 பேர் நியமனம்- வேட்டை ஆரம்பம்!
மதுரை: கிரானைட் முறைகேட்டை விசாரிக்க உள்ள சகாயம் குழுவில் துணை கலெக்டர் உள்பட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக சகாயத்தின் விசாரணைக் குழுவுக்கு இடம் கூட ஒதுக்காமல், அதிகாரிகளையும் நியமிக்காமல் இழுத்தடித்து வந்தது தமிழக அரசு. நீதிமன்றம் கடுமையாக விளாசியதையடுத்து இப்போது தமிழக அரசு பணிந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த 31 ஆம் தேதி அனுமதி அளித்து, சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மதுரையில் முகாம் அலுவலகமும் அமைக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சகாயம் குழுவில் 2 துணை கலெக்டர்கள், 2 தாசில்தார்கள் மற்றும் புவியியல் அலுவலர்கள், பணியாளர்கள், தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வீடியோகிராபர், போட்டோ கிராபர் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த குழுவுக்கு, போக்குவரத்து தேவையான வாகன வசதி மற்றும் அலுவலக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் சகாயத்திற்கு அனுப்பி உள்ளது.
இந்த குழுவில் தனக்கு விருப்பமான அதிகாரிகளை தேர்வு செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சகாயத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சகாயம் தங்குவதற்கு அறையும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முகாம் அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இனி சகாயம் வேட்டை ஆரம்பமாகும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications