பி.ஆர்.பி. பாலீஷ் கம்பெனியைப் பார்த்து அதிர்ந்த சகாயம்... கிளைமாக்ஸை நெருங்கும் கிரானைட் விசாரணை
மதுரை: பத்துமாதகாலமாக நடைபெற்று வரும் கிரானைட் முறைகேடு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 20 கட்ட விசாரணைகள் நடந்துள்ளன. பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் காத்திருந்தன. சிர தினங்களுக்கு முன்னர் பி.ஆர்.பி. கிரானைட் பாலீஷ் கம்பெனியை ஆய்வு செய்த சகாயம் அங்கு கண்மாய்களை மூடி அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களும், விலை மதிப்பு மிக்க கைவினைப் பொருட்களும் மலைப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.
கிரானைட் முறைகேடு புகாரில் தோண்ட தோண்ட புறப்படும் பூதங்கள் போல உடைக்கப்பட்ட மலைகள்... சிதைக்கப்பட்ட புராதான சின்னங்கள்... அழிக்கப்பட்ட நீர்நிலைகள்... கிராம மக்களிடம் இருந்து அடித்தும், மிரட்டியும் பிடுங்கப்பட்ட விவசாய நிலங்கள் என ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். இந்த ஆதராங்களை சேகரிக்கத் தொடங்கிய நாள் முதல் செப்டம்பர் 10ம் தேதி வரைக்கும் சகாயத்திற்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆவணங்களை அழிப்பதோடு உன்னையும் அழித்து விடுவோம் என்று இரு தினங்களுக்கு முன்னர் மிரட்டல் வரவே கூடுதல் பாதுகாப்போடு மீண்டும் களமிறங்கியுள்ளார் சகாயம்.

கள ஆய்வில் சகாயம்
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேலாக முறைகேடு நடந்த முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை 19 கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

புகார் மனுக்கள்
இந்த ஆய்வின்போது பஞ்ச பாண்டவர் மலை, ஆக்கிரமிப்பில் சுருங்கிய கண்மாய்கள், நிலப்பகுதிகளை பார்வையிட்டார். பல இடங்களில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுக்களை அளிக்குமாறு சகாயம் தெரிவித்தார். மனுக்கள் மீது நடந்த விசாரணை குறித்தும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

மர்ம தொலைபேசி மிரட்டல்
தற்போது 20 வது கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் சகாயத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டலும், அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை அழிக்கப்போவதாகவும் மர்ம டெலிபோன் வந்தது. அதனால் அலுவலகத்திற்கும், அவருக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சமணர் படுகை
மேலூர் அருகே மாங்குளம் மீனாட்சிபுரத்தில் 129 ஏக்கர் பரப்பில் கழுகுமலை உள்ளது. இந்த மலையில் உள்ள 5 சமணர் படுகைகளை சகாயம் புதன்கிழமை ஆய்வு செய்த சகாயம் இப்பகுதி தொல்லியல் துறையின்கீழ் புராதன சின்னமாக உள்ளது. இம்மலைக்கு அருகே குவாரிக்கு அனுமதி அளிக்கலாமா?' என்று அதிகாரிகளிடம் கேட்டார். முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

பி.ஆர்.பி.கிரானைட் பாலீஷ்
பின்னர் பிஆர்பி நிறுவனத்தின் 337 ஏக்கர் பரப்பிலான கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் அவர் ஆய்வு செய்தார். தொழிற்சாலைக்குள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரு கால்வாய்கள் இருந்தன. அவற்றை அனுமதியின்றி வேறு பகுதிக்கு மாற்றியதை கண்டறிந்தார்.

கண்மாய்கள் மூடல்
பாசன வசதி மிக்க 4 கண்மாய்களை ஆக்கிரமித்தே இத்தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கண்மாய்களில் கிரானைட் பாலீஷ் கழிவுகள் கொட்டி, சிமென்ட் தளம் போட்டு மூடப்பட்டிருந்ததையும் சகாயம் பார்வையிட்டார்.

கோவில் ஆக்கிரமிப்பு
தெற்குத்தெரு, நரசிங்கம் கிராமத்தினரின் அய்யனார் கோயிலை ஆக்கிரமித்தும் தொழிற்சாலை இருந்தது. சாமி கும்பிட்டு வர தங்களை அனுமதிக்கும்படி கோயில் பூசாரி மாதவன் மற்றும் கிராமத்தினர் கோரினர். இக்கோயிலையும் சகாயம் பார்வையிட்டார்.

கால்வாய் அழிப்பு
அரசின் 1.20 ஏக்கர் கால்வாய் அழிக்கப்பட்டிருக்கிறது. கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியாறு கால்வாய் பாசனம் உள்ள இந்த நஞ்சை நிலத்தை, தொழிற்சாலைக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு செய்தாரா? இத்தொழிற்சாலைக்கு உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டதா?'' என சகாயம் கேட்டார். ஆனால் அதிகாரிகளால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

தூத்துக்குடி துறைமுகம்
முறைகேடு புகார்கள் எழுவதற்கு முன்பாக கிரானைட் கற்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அதிலும் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரையொட்டி இது குறித்தும் சகாயம் விசாரித்து வருகிறார். அதற்காக சகாயம் தூத்துக்குடி சென்று நேரடியாக விசாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமையன்று காலையில் அலுவலகத்துக்கு வந்த சகாயத்தை, முன்னாள் சுங்க இலாகா அதிகாரி ராஜன் சந்தித்தார். அவருடன் கிரானைட் ஏற்றுமதி விதிமுறைகள், வரிவிதிப்பு போன்றவை குறித்து சகாயம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

செப்டம்பர் 15ல் அறிக்கை தாக்கல்
தொழிற்சாலையை பார்வையிட்டதன்மூலம் கள ஆய்வுப்பணியை சகாயம் நிறைவு செய்துள்ளார். வரும் 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைகிறது. எனவே, இறுதிக்கட்ட விசாரணையை வரும் 12ம் தேதியுடன் முடிக்க சகாயம் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு வரும் 15ம் தேதி அறிக்கை தாக்க செய்ய உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications