கன்னியாகுமரி: நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல்... பதற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் இருகிராம மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த கெவின், யாகப்பன், ததேயூஸ், அலெக்சாண்டர், பிஸ்மாஸ் ஆகிய 5 பேரும் இன்று அதிகாலை பைபர் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது கூட்டப்புளியை சேர்ந்த மீனவர்கள் 5 படகுகளில் சென்று இவர்கள் பைபர் படகை தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது திடீரென கூட்டப்புளி மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் கெவின், யாகப்பன், ததேயூஸ், அலெக்சாண்டர், பிஸ்மாஸ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து காலை 8 மணிக்கு இவர்கள் ஆரோக்கியபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் காயம் அடைந்த 5 மீனவர்களையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடந்த வாரம் ஆரோக்கியபுரத்தைச்சேர்ந்த 8 மீனவர்களை கூட்டப்புளியிலும், கூட்டப்புளியைச் சேர்ந்த 2 மீனவர்களை ஆரோக்கியபுரத்திலும் சிறை பிடித்தனர். பேச்சுவார்த்தைக்குப்பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் ஆரோக்கியபுரம், கூட்டப்புளி மீனவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் எதிரொலியாக தற்போது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.
மீனவர்கள் தாக்கப்பட்டதையடுத்து ஆரோக்கியபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications