குரூப்-4க்கு ஜூலை, குரூப்-1க்கு ஆகஸ்ட்டில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்- டி.என்.பி.எஸ்.சி
சென்னை: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 3வது வாரத்தில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், குரூப் 2, குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 79 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 1 மெயின் தேர்வு முடிவு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட 1,241 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 (நேர்முகத்தேர்வு) முதல்நிலைத் தேர்வு முடிவு வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட 74 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் 2வது வாரம் வெளியாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 1,947 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் இறுதியில் வெளியாகும்.
குரூப்-4 பிரிவில் 4,931 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியாகிறது. குரூப்-1 பிரிவில் 45 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். தொகுதி சுகாதார புள்ளிவிவரத்திற்கான 172 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
65 உதவி சிறைத்துறை அதிகாரி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியிலும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 3வது வாரத்திலும், 5 சுற்றுலா அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்திலும் வெளியிடப்படுகிறது. குரூப்-3 ஏ பிரிவில் 36 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 2வது வாரத்தில் வெளியாகும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications