அக் 5-ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் -18.. நாளை 'கவுன்ட் டவுன்'!
சென்னை: பிரான்ஸ் நாட்டின் ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் 'ஜிசாட்-18' செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.

இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட 'ஜிசாட்-18' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட 'ஜிசாட்-18' என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா 'கவ்ரவ்' ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'ஏரியான்-5' ராக்கெட் மூலம் வரும் 5-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 'கவுண்ட் டவுன்' வரும் நாளை (செவ்வாய்கிழமை) தொடங்கும்," என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications