முறுக்கு கார சேவுக்கு பொருந்துமா?.. அருண் ஜேட்லியை விளாசும் அரவிந்த் சாமி!
ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பைக் குறிப்பிட்டு நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பால் இப்போதே தீபாவளி வந்து விட்டது என்று மோடி கூறியுள்ள நிலையில் வரி குறைப்பு கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் அர்விந்த்சாமி.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அமைச்சர்களும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி நடிகர் அரவிந்த்சாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
|
இதற்குத்தான் காத்திருந்தேன்
இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். யாராவது முழு விவரங்களைப் படித்தீர்களா? என்று கேட்டுள்ளார்
|
முறுக்கு கார சேவுக்கு பொருந்துமா?
இது முறுக்கு மற்றும் காராசேவுக்கும் பொருந்துமா? என்பதை டிவிகளில் விவாதங்களைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
சினிமா டிக்கெட்டுகளுக்கு வரி
மேலும், சினிமா டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி. இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைப்பு. இதை 'அனுமானமான கூட்டு சேமிப்பு திட்டம்' என விளம்பரப்படுத்தலாம்.
|
12 சதவித ஜிஎஸ்டி வரி
5 சதவித ஜிஎஸ்டி என்பதால் அதிக தின்பண்டம் சாப்பிட்டுவிட்டேன். உடல்நலம் சரியில்லை. மருத்துவரிடம் சென்றால் அதிக கட்டணம். ஏன் என்று கேட்டால் ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்த கருவிகளுக்கு 12 சதவித ஜிஎஸ்டி என்றார். அப்படியா? என்று கேட்டுள்ளார்.

அரவிந்த் சாமியின் ட்விட்டர்கள்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கிண்டலடிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி பற்றி நடிகர் அரவிந்த சாமி தனது டுவீட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications