ஜிஎஸ்டி.. மாநில வணிக வரித்துறை செக்போஸ்ட்டுகள் அகற்றம்.. லஞ்ச லாவண்யம் குறைந்தது!
சென்னை: ஜிஎஸ்டி வரி அறிமகும் செய்யப்பட்டுள்ளதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வணிக வரித்துறை செக்போஸ்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதனால், சரக்கு லாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு சரக்குகள் வேகமாக சென்று சேர ஆரம்பித்துள்ளன.
ஜிஎஸ்டி வரியால் மாநில வணிக வரி துறை அதிகாரிகளுக்கு மாநில எல்லைகளில் எந்த வேலையும் இல்லை. முன்பெல்லாம், மாநில எல்லைகளில் செக்போஸ்ட் போட்டு, லாரிகளை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை இருந்தது.

லஞ்சம்
லாரிகளை பிடித்து வைத்துக்கொண்டு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளால் பெரும் மன உளைச்சலுக்கும், கால விரையத்திற்கும் ஆளாகினர் லாரி உரிமையாளர்கள். இதனால் பொருட்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல், லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாயிற்று.

சரக்குகள்
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அனைத்து வரிகளும் கட்டப்படுவது உறுதி செய்யப்படுகிறது. எனவே, செக்போஸ்டில் சோதனைக்கு அவசியம் எழவில்லை. இதனால் சரக்குகள் வேகமாக போகின்றன. வரி வருவாய் அரசுக்கு போகிறது. அதிகாரிகளுக்கு லஞ்சமாக சென்ற முறைகேடான வருமானம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த செக்போஸ்டுகளை அகற்றிவிட்டன. பாஜக ஆளும் அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் வணிக வரித்துறை செக்போஸ்டுகள் உள்ளன.

சில நாட்களில் சரியாகும்
ஜூலை 5ம் தேதி வரை இந்த செக்போஸ்டுகள் இருக்கும் என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. பீகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களும் செக்போஸ்டுகளை அகற்றஇவிட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications