கிண்டியில் ஐடிஐ மாணவர் கொலை.. தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

எரிந்த நிலையில் மாணவனின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எரிந்த நிலையில் மாணவர் சடலம் | ஒயின்ஷாப்பில் மது அருந்திய 4 பேர் பலி- வீடியோ

    சென்னை: சென்னையில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த அவரது சடலத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்,.

    தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாங்கேரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிண்டியில் உள்ள ஐடிஐயில் படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சிவக்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

    Guindy ITI Student murder in Chennai 25-06-2018

    இதனால் அவர் மாணவர்கள் யாராவது வீட்டுக்கு சென்றிருக்கலம் என்று சிவக்குமாரை தேடும் முயற்சியில்கூட யாரும் ஈடுபடவில்லை. இது தொடர்பாக புகாரும் காவல்நிலையத்தில் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் கிண்டியின் சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த ஒரு சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர்தான் தெரிந்தது அது மாணவர் சிவக்குமார் என்று. இதையடுத்து சடலத்தை மீட்டிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மாணவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவருக்கு யாராவது விரோதிகள் இருந்தார்களா? என்று சக மாணவர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவிலும், நாளை நடைபெறவுள்ள சிவக்குமாரின் பிரேத பரிசோதனையின் முடிவிலும்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+