குமரி சின்னத்துறை மீனவர்கள் மீட்பு போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்பு
கன்னியாகுமரி சின்னத்துறையில் தொடரும் மீனவர்கள் மீட்பு போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பங்கேற்றார்.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக் கோரி சின்னத்துறையில் 2-வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று பங்கேற்றார்.
கன்னியாகுமரியின் சின்னத்துறை கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க 38 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்த மீனவர்களை மீட்கக் கோரி சின்னதுறையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று 2-வது நாளாக சின்னத்துறையில் நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் மீனவர்களை காப்பாற்றுக எனும் பதாகைகளுடன் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷூம் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications