கமல் ஒரு கோழை, அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா?.... எச்.ராஜா காட்டம்!
நடிகர் கமல்ஹாசன் ஒரு கோழை அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஒரு கோழை அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன் தினம் இந்துதீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் சிறுவன் ஒருவன் கமல்ஹாசனின் படத்தை பின்னால் இருந்து ஒருவர் சொல்ல அதனை கேட்டு கமலின் படத்தை கத்தியால் குத்தி கிழிப்பது போல அந்த வீடியோ பதிவு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கமல் பதிவிட்டிருந்த கருத்தில் என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என்று கூறி இருந்தார்.

கமல் சொன்ன இந்து தீவிரவாதம்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் எந்த மதமாக இருந்தாலும் அதில் வன்முறை இருக்கக் கூடாது என்று சொன்னவர், இந்து மதத்திலும் தீவிரவாதம் இருப்பதாக கூறி இருந்தார். இதனையடுத்து அவரை இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ராஜா விமர்சனம்
இந்நிலையில் கமல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, மணிரத்னம் வீட்டில் வைத்த குண்டு வெடிக்கவில்லை, ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் பிரச்னை என்றதும் கும்பிட்டு விழுந்து 16 கட்ஸ் ஒப்பு கொண்ட தைரியமில்லாத நபர் கமல்ஹாசன். அவர் போய் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடுங்கியவர் கமல்
அண்மையில் P. ஜெயினுலாபுதீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் 20 வருடத்திற்கு விஸ்வரூபம் 2 வராது என்றும் உலகநாயகன் விஸ்வரூபம் ரிலீஸின் போது நடுங்கிப் போயிருந்தார் என்று ஜெயினுலாபுதீன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
|
கோழை சொல்வதற்கு கவலை வேண்டாம்
கமல்ஹாசனை கேலி செய்வது போல கைகளை நடுங்குவதைப் போல காண்பித்து ராஜா கேலி செய்துள்ளார். அப்படிப்பட்ட கோழை கமல்ஹாசன், அந்த கோழை சொல்வதைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை என்று நக்கலாக சிரித்துக் கொண்டே ராஜா பேட்டியளித்துள்ளார்.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications