கரூர், மாயவரத்தில் நடந்தது ஞாபகம் இருக்கா? திருமாவை எச்சரிக்கிறாராம் எச். ராஜா
கரூர் மாயவரத்தில் நடந்தது ஞாபகம் இருக்கா என திருமாளவனவை எச் ராஜா எச்சரித்துள்ளார்.
Recommended Video

கோவை: கரூர் மாயவரத்தில் நடந்தது ஞாபகம் இருக்கா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எச் ராஜா எச்சரித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராமர், அயோத்தி குறித்துப் பேசியிருந்தார். அது தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் பேச்சை வைத்து பாஜகவினர், இந்து அமைப்புகள் கண்டனங்கள், வழக்குகளுடன் கிளம்பி விட்டனர். அவர்களில் எச். ராஜாவும் ஒருவர்.

பாஜகவினர் எதிர்ப்பு
கோவை ரயில் நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருமாவளவனை கண்டித்து கருத்து தெரிவித்தார்.

கலவரத்தை தூண்டும் செயல்
சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது மத கலவரத்தை தூண்டும் செயல் என அவர் தெரிவித்தார். திருமாவளவனை மானங்கெட்டவர் என்றும் எச் ராஜா கடுமையாக விமர்சித்தார்.

நியாபகம் இருக்கா?
ஜிகாதிகளின் பின்னால் மறைந்து கொண்டு அவர் பேசுவதாகவும், கரூர், மாயவரத்தில் நடந்ததை திருமாவளவன் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் எச் ராஜா தெரிவித்தார். கடந்த ஆண்டு தனது சமூக பெண்களை தவிர்த்து மற்ற சமூக பெண்களை இழிவாக திருமாவளவன் பேசியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கின்றாரா எனவும் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

ஆர்கே நகரில் எதிரொலிக்கும்..
கோவில்களை இடிப்போம் என கூறி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் எனவும் எச்.ராஜா வலியுறுத்தினார். கடந்த ஆண்டு பெண்களை திருமாவளவன் இழிவாக பேசியது நிச்சயம் ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் எச். ராஜா தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications