கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரவுடித்தனம் இதுதான் விசிக அடையாளம்.. வெறுப்பை உமிழும் எச்.ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பஞ்சாயத்து வன்முறை மற்றும் ரவுடித்தனம்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடையாளம் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

கரூரில், பாஜக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர்.

H Raja condemns VCK for karur violence

அப்போது இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

கட்டப்பஞ்சாயத்து வன்முறை மற்றும் ரவுடித்தனம்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடையாளம் என எச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் எச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP national secretary H Raja condemns VCK for karur violence. H Raja said VCK should be expelled from Tamilnadu politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற