திருமாவளவனால் பதற்றமாம்.. குண்டாஸில் கைது செய்ய வேண்டுமாம்.. அலறும் எச். ராஜா
விசிக தலைவர் திருமாவளவனசி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோருகிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
Recommended Video

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று எச். ராஜா கூறியதாவது:
ஓகி புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்தது. ஆனால் தமிழக அரசுதான் சரியாக கையாளவில்லை.

நிர்மலா சீதாராமன் பார்வை
ஓகி புயல் பாதித்த போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கன்னியாகுமரி வந்து பார்வையிட்டார்.

அநாகரிக போஸ்டர்கள்
கன்னியாகுமரியில் இதுவரை மொத்தம் 2,426 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்களை வைப்பது அநாகரிகமானது.

தேசவிரோதிகள் முகாம்
அணு உலை எதிர்ப்பு இயக்கம், மே 17 இயக்கம் போன்ற தீயசக்திகளை மீனவர்கள் அனுமதிக்க கூடாது. கன்னியாகுமரியில் தேசவிரோதிகள் முகாமிட்டு பாஜகவுக்கு எதிராக மீனவர்களை திசை திருப்புகின்றனர்.

திருமாவை கைது செய்க
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். திருமாவளவன் மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருமாவளவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். திருமாவளவனை போலீசார் கைது செய்ய தயங்குவது ஏன்?
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications