For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சதியா இருக்குமோ? கிளப்பிவிடும் எச்.ராஜா

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து தானாக ஏற்பட்டதா இல்லை ஏதேனும் சதி உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபம் மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது விபத்தா சதியா என கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்துக்கு காரணமாக ஆக்கிரமிப்புகள்தான் என்று பொதுமக்கள் சார்பில் சொல்லப்படுகிறது.

H.Raja demands to enquire about Meenakshi Amman Koil fire accident

ஜோதிட ரீதியிலாக நாட்டுக்கு கெடுதல் என்பதையே இந்த தீவிபத்து உணர்த்துகிறது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து குறித்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சம்பவம் விபத்தா சதியா என கண்டறிய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இன்னமும் ஏன் மதுரை செல்லவில்லை. அமைச்சர் சம்பவ இடத்துக்கு செல்லாதது அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது என்றார் எச்.ராஜா.

இதுபோன்ற தீவிபத்து சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP National Secretary H.Raja demands to inquire the fire accident incident in the angle of accident or conspiracy. He also accuses Hindu Religious Minister Sevvoor Ramachandran not visit the Madurai temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X