ஹரப்பா நாகரீகத்திற்கு இணையாக கழிவுநீர் குழாய் அமைத்து வாழ்ந்த தமிழன்! தொல்லியல் ஆய்வில் திருப்பம்
மதுரை: ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான ஒரு நகர நாகரீகம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரம் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளது., தமிழகத்தில் முன் எப்போதும் கிடைத்திராத அரிய தொல்லியல் ஆதாரங்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில்தான் இந்த பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. ஹரப்பாவில்தான் இதுபோன்ற குழாய்களுடன் கூடிய நகர நாகரீகம் இருந்தது தெரியவந்த நிலையில் இப்போது தமிழகத்திலும் அதேபோன்ற நாகரீகம் இருப்பது திருப்புமுனையை தந்துள்ளது.

இப்போது பிளாஸ்டிக் பைப் மூலம் நாம் நீரை வெளியேற்றுவதை அக்காலத்தில் சுடுமண் குழாய் மூலம் மேற்கொண்டுள்ளனர். ஹரப்பா மற்றும் தமிழகம் நடுவேயான மக்களிடையே ஒற்றுமை இருந்திருக்க வேண்டும் என்பதையும் இதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் 10க்கும் மேற்பட்ட சங்க கால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (தற்போது வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்பு போன்றது), எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளையுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 3,000க்கும் மேற் பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர் போன்ற அகழ் வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் இப் போதுதான் முதல்முறையாக சுடு மண் முத்திரை கிடைத்துள்ளது. எனவே இந்த ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications