“இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை..” டிவிட்டரில் ஹர்பஜன் சிங் வேதனை

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட்டர் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Harbhajan singhs condolence

இந்நிலையில் இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், டிவிட்டர் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழில் இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், " சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா. முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் #RIPKalaignar #கலைஞர்'' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+