நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
கடின உழைப்புடன் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கடின உழைப்புடன் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.

கட்டாயப்படுத்தியதால்
இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறியதாகவும் ஆனால் ஏசி சண்முகம் கட்டாயப்படுத்தியதால் பங்கேற்றதாகவும் கூறினார்.

ஏசி சண்முகத்திற்கு பாராட்டு
மேலும் எந்த நிலையிலும் ஏசி சண்முகம் முடி முதற்கொண்டு அனைத்தையும் சரிசெய்து நீட்டாக இருப்பார் என்றும், பலருக்கு வேலை கொடுத்திருப்பதாகவும் பாராட்டி பேசினார். மேலம் ஏசி சண்முகம் எறும்பு போல் வேலை செய்வதால் இரும்பு போல் இருப்பதாகவும் ரஜினி புகழாரம் சூட்டினார்.

மனதை கட்டுப்படுத்த வேண்டும்
நம் உடலை பிசியாக வைத்திருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்றும், மனது தானாக பிசியாகிவிடும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். மனதை கட்டுப்படுத்த தியானம் போன்றவை செய்ய வேண்டும்.

ஆண்டவன் அருள் தேவை
நன்றாக உழைப்பவர்கள் எல்லாம் வெற்றி பெறமுடியாது. உழைப்பும் முயற்சியும் இருப்பவர்கள் மட்டும் வெற்றி பெற முடியாது, ஆண்டவன் அருளும் நல்ல எண்ணமும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications