கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?.. டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை என தகவல்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் கீழ் உள்ளார். தொடர்ந்து மருத்துவ குழுவும் அவரை கண்காணித்தபடியே உள்ளனர். இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அளிக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.

இதனால் சோர்ந்து கவலையில் இருந்த தொண்டர்கள் சற்று உற்சாகமாயினர். எனினும் கருணாநிதி பூரண உடல்நலம் பெற்று வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான சிகிச்சையை அவருக்கு அளிக்க உடனடியாக தொடங்கிவிட்டோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு டாக்டர் தலைமையிலான குழு கருணாநிதி சிகிச்சை தொடர்பானதை பார்த்து வருகிறது. எனினும் கருணாநிதியின் உடல் நிலையில் வேறு எந்த பெரிய அளவிலான மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications