கருணாநிதியை ஜாதி பெயரை கூறி திட்டிய வைகோ: பொன்னார், ஈவிகேஎஸ், அன்புமணி கண்டனம்
சென்னை: தேமுதிக பிளவுபட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் எனக் கூறி அவரை தரக்குறைவாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பிளவுபட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கருணாநிதியை ஜாதிப் பெயரை கூறி திட்டி தரைக்குறைவாக அவர் பேசியுள்ளார். திமுகவினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
வைகோவின் அநாகரீக பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன். ராதாகிருஷ்ணன்
வைகோ இப்படி பேசியுள்ளது மிகவும் அநாகரிகமானது. வேதனை அளிப்பதாக உள்ளது. இப்படி அரசியல் நடத்தும் கட்சிகளை துடைத்தெறிய வேண்டும். வைகோவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்
வைகோ கடந்த ஒரு வார காலமாகவே தன்னை மறந்து நிதானம் இன்றி நடக்கிறார். செய்தியாளர்களிடமும் அப்படி தான் நடந்துள்ளார். நேற்று என்னவென்றால் பேண்ட், சட்டை அணிந்து தலையில் முக்காடு போட்டு காவல்துறை அதிகாரியிடம் தேவையில்லாமல் சண்டை போட்டுள்ளார். அரசியலை தாண்டி ஒரு மூத்த தலைவராக உள்ளவர் கருணாநிதி. அனைவராலும் மதிக்கப்படும் அவரை வைகோ ஒருமையில் பேசியதாக கேள்விப்பட்டேன். அது உண்மையில் எனில் வைகோ மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லா
வைகோ நிதானத்தை இழந்து பேசியுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எதுவாக இருந்தாலும் அளந்து பேச வேண்டும் என்பதை புரிந்து பேச வேண்டும் என்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.

அன்புமணி
அரசியலில் உள்ளவர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், நாகரிகமாக பேச வேண்டும். அதுவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி தரக்குறைவாக பேசக் கூடாது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications