டிவிட்டர் டிரண்டில் முதலிடம்: வலைஞர்களுக்கு நன்றி சொன்ன கலைஞர்
சென்னை: தனது 92 ஆவது பிறந்த நாளையொட்டி வாழ்த்துக்கள் கூறி, இந்திய அளவில் டிவிட்டர் ட்ரெண்டில் முதலாமிடம் பெற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
குறுஞ்செய்தி - இணையதளம் - சமூக வலைதளம் வாயிலாகவும் - நேரிலும், கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தனக்கு பிறயதநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

டிவிட்டரில் முதலிடம்
டிவிட்டர் வலைதளத்தில் "#HBDkalaignar" என்ற டேக்கைப் பயன்படுத்தி எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததன் காரணமாக, நேற்று மட்டும் இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்காக பாடுபடுகிறேன்
ஏற்கனவே கடந்த 2-6-2015 அன்று நான் வெளியிட்ட ‘பிறந்தநாள் செய்தியில்' "என்னுடைய 91வது அகவை நிறைவடைந்து, 92வது அகவை பிறக்கிறது. கடந்த 18-5-2015 அன்று "முத்தமிழ்ப் பேரவை"யின் 37வது ஆண்டு இசைவிழாவில் பேசும்போது, "நான் ஏறத்தாழ 90 ஆண்டுகள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து உங்களோடு இரண்டறக் கலந்து, உங்களுக்காகப் பாடுபடத் தொடங்கி, இன்றைக்கும் உங்களுக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

உத்வேகம் தரும் நம்பிக்கை
நான் இன்னும் ஆறேழு அகவைகள் - அல்லது அதிக மானால் எட்டு ஆண்டுகள் - 100 வயது வரை வாழ்ந்து உங்களோடு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவேன். அப்படிக் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய உடலும் இப்போது, இந்த அளவுக்குத் தளர்ந்திருக்கிறதே, இதைப்போல அப்போதும் தளர்ந்துதான் இருக்கும். அந்தத் தளர்ச்சியைப் போக்க எனக்கு உணர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்க நான் உங்களைத்தான் உறுதியோடு நம்பியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

ஊக்குவிப்பு தூண்டுகோல்
ஆம், நீங்கள் எந்த அளவுக்கு எழுச்சியோடு இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நானும் தளர்ச்சி நீங்கித் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பாடுபடுவேன்."என்று குறிப்பிட்டுள்ளபடி; தங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் எனக்கு மக்கள் பணியை ஊக்குவிப்பதாகவும்; மென்மேலும் பணியாற்றிடத் தூண்டுகோலாகவும் உள்ளது என்பதைத் தெரிவித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications